Skip to main content

அண்ணாமலை பல்கலைக்கழக நிறுவனர் நாள் விழா; அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு!

Published on 03/10/2024 | Edited on 03/10/2024
Minister Mathivanan participates in Annamalai University Founder's Day function!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக நிறுவனரின் 90வது ஆண்டு நிறுவனர் நாள் விழா மற்றும் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராம.கதிரேசன் தலைமை தாங்கினார்.  இதில் சிறப்பு விருந்தினராக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் முன்னாள் மாணவர்களின் வளர்ச்சிக்குப் பல்கலைக்கழகம் எந்த அளவிற்கு உதவியது என்பதை பல்வேறு சம்பவங்களின் மூலம் விளக்கினார்.  கல்லூரி வாழ்க்கை ஒருவரின் வாழ்க்கை பயணத்தை எவ்வாறு மாற்றியது என்பதையும் விளக்கிக் கூறினார்.  சமுதாய முன்னேற்றத் திட்டங்களில் இப்பல்கலைக்கழகம் எவ்வாறு அரசுடன் சேர்ந்து பணியாற்றியது என்பது குறித்தும் விளக்கிக் கூறினார்.

இந்நிகழ்வில் பெங்களூரு டெசால்வ்ஸ் நிறுவனத் தலைவர் ப.வீரப்பன், பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேல், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், தொலைதூரக் கல்வி இயக்குனர், பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள். புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை ஆசிரியர்கள், ஊழியர்கள் மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்