Skip to main content

வேட்டையன் படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கு; நீதிமன்ற அதிரடி உத்தரவு

Published on 03/10/2024 | Edited on 03/10/2024
vettaiyan movie release ban issue court ordered

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேட்டையன். லைகா தயாரித்துள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பகத் ஃபாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என பலரும் நடித்துள்ளனர்.  அனிருத் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடா உள்ளிட்ட மொழிகளில் யு/ஏ சென்சார் சான்றிதழுடன் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் முன்னதாக வெளியான நிலையில் நேற்று படத்தின் ட்ரைலர் வெளியானது. அதை பார்க்கையில் என்கவுண்டர் பற்றி விரிவாக பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிந்தது. 

இதையடுத்து இப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த பழனிவேலு என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், “வேட்டையன் படத்தில் என்கவுன்ட்டர் தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும். அல்லது மியூட் செய்யும் வரை அப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். 

இந்த வழக்கு தற்போது விசரணைக்கு வந்துள்ளது. இப்படத்திற்கு இடைக் கால தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.மேலும் மத்திய திரைப்படம் சான்றிதழ் வாரியம், லைகா நிறுவனம், தமிழக அரசு ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்