விளையாட்டு போட்டிகள் நடக்கும்போதெல்லாம் வெற்றி யார்பக்கம்? என்று ஆக்டொபஸிடம் குறிகேட்ட காலமெல்லாம் மலையேறி விட்டது என்பதை போல்தான் நடந்து வருகின்றது தற்போதைய குறிகேட்கும் முறைகள். அண்மையில் ஒரு பூனையிடம் இரண்டு கிண்ணங்களில் பிடித்த உணவை வைத்து எந்த பக்கம் இருக்கும் உணவில் முதலில் வாய்கிறதோ அந்த பகுதியை குறிப்பிடும் அணி வெற்றி பெரும் என்றெல்லாம் குறிகேட்கப்பட்டது. அதேபோல் தற்பொழுது பன்றி ஒன்றிடம் குறிகேட்க தொடங்கியிருக்கிறார்கள்.
''சிறப்பு சக்தியுடன்'' இருக்கும் இந்த பன்றி, கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் அரையிறுதிக்கு நுழையும் நான்கு நாடுகளை தேர்ந்தேடுத்துள்ளதாக அதை நம்புகிறவர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரிட்டனில் டெர்பிஷையர் பகுதியின் ஹெஜ் கிராமத்தைச் சேர்ந்த மார்கஸ் என்ற இந்த சிறிய பன்றி, பெல்ஜியம், அர்ஜெண்டினா, நைஜீரியா மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் அரையிறுதிக்குள் நுழையும் என் தேர்ந்தேடுத்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். கால்பந்தாட்டத்தில் கலந்துகொள்ளும் நாடுகளின் கொடிகள் குத்தப்பட்ட ஆப்பிள்கள் மார்க்ஸ் முன் வைத்துள்ளனர். அனைத்து ஆப்பிள்களையும் தின்ற இப்பன்றி, நான்கு நாடுகளின் கொடிகள் குத்தப்பட்டிருந்த ஆப்பிள்களை மட்டும் சாப்பிடவில்லை.
இதற்கு முன்பே 2014 ஃபிஃபா உலக போப்பையையும், பிரெக்சிட் வாக்கெடுப்பையும், அமெரிக்க அதிபர் தேர்தலையும் இப்பன்றி சரியாக கணித்ததாக இதன் உரிமையாளர் ஜூலியட் ஸ்டீவன்ஸ் கூறுகிறார். ஸ்டீவன்ஸ் தனது பண்ணையில் 100 பன்றிகளை வளர்க்கிறார். ஆனால், இப்பன்றிக்குத்தான் தன் இதயத்தில் தனி இடம் வைத்துள்ளார். ''இது ஒரு அழகான ஆளுமை கொண்டது குழப்பங்களில் கலக்கமடையாது.'' என்கிறார் அவர். இப்பன்றி 100% சரியாக கணிக்கும் என இதன் உரிமையாளர் கூறினாலும், சில சமயம் சறுக்கியுள்ளது.
இப்பன்றி கணித்திருக்கும் நான்கு நாடுகளில், இரண்டு நாடுகள் கால் இறுதியில் மோத வேண்டும். எனவே நான்கு நாடுகளும் அரை இறுதிக்கு செல்வது சாத்தியமில்லை ஆனால், வெற்றியாளரைத் தேர்வு செய்யக்கூடிய ஒரு வாய்ப்பு இதற்கு உள்ளது. 2010 உலகப்கோப்பை கால்பந்து போட்டியின் போது, பால் என்ற ஆக்டோபஸ் வெற்றியாளரைச் சரியாக கணித்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால் இந்த கணிப்பை அனைவரும் பாராட்டியும் பன்றிக்கு நன்றியும் சொல்லியும் வருகின்றனர் கால்பந்து ரசிகர்கள்.