Skip to main content

இதுதான் காமன்வெல்த் நிர்வாகமா? கோபம் காட்டிய சாய்னா நேவால்!

Published on 03/04/2018 | Edited on 03/04/2018

காமன்வெல்த் போட்டி நடக்கும் பகுதிக்கு தனது தந்தையை அனுமதிக்காததால் சாய்னா நேவால் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

 

commonwealth games

 

2018ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் பகுதியில் நாளை தொடங்குகிறது. இதில் கலந்துகொள்வதற்காக இந்தியாவில் இருந்து 218 வீரர்கள் உட்பட 326 பேர் சென்றுள்ளனர்.

 

இதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியாவின் முன்னணி பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால், தனது தந்தை காமன்வெல்த் நடக்கும் பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். முன்னதாக, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் சாய்னாவின் தந்தை ஹர்வீர் சிங் மற்றும் பிவி சிந்துவின் தாயார் விஜயா புஸார்லா ஆகியோருக்கு அனுமதியளித்திருந்தது. ஆனால், அவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று தெரிகிறது.

 

 

 

 

இதுகுறித்து சாய்னா நேவால் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்த பதிவுகளில், ‘என் தந்தை என்னோடு காமன்வெல்த்திற்கு பயணிப்பதற்கான அதிகாரப்பூர்வ அனுமதி கிடைத்தது. அதற்காக நான் முழுப்பணத்தையும் செலுத்துவிட்டேன். இருந்தும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நான் கலந்துகொள்ளும் எல்லா போட்டிகளிலும் அவர் என்னுடன் இருப்பார். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது பற்றி ஏன் யாரும் முன்கூட்டியே எனக்கு தெரியப்படுத்தவில்லை’ என கோபமாக பதிவிட்டுள்ளார்.