Skip to main content

உலகக்கோப்பையில் இருந்து நீக்கப்பட்ட தவான்... புதிய வீரருக்காக அனுமதி கேட்கும் பிசிசிஐ...

Published on 19/06/2019 | Edited on 19/06/2019

உலகக்கோப்பை தொடரிலிருந்து இருந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

shikar dhawan ruled out of worldcup series and rishab pant may replace in his position

 

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த ஷிகர் தவான், வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் வீசிய பவுன்சர் பந்து தாக்கியதில் இடது கை பெருவிரலில் காயம் அடைந்தார். லேசான எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதால், அவர் அடுத்த சில போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அறிவித்தது. இதனையடுத்து அவருக்கு பதில் விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் காயம் குணமடையாததால் தவான் உலகக்கோப்பை தொடரில் மீதமுள்ள போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவருக்கு பதில் இடது கை பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்படுவர் எனவும், அதற்காக ஐசிசி யிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

RCB vs PBKS; நிதானமாக ஆடிய பஞ்சாப் கிங்ஸ்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

RCB vs PBKS ipl live score update dhawan plays important knock

ஐபிஎல் 2024 ஆறாவது லீக் ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி பஞ்சாப் அணி முதல் பேட் செய்ய களமிறங்கியது. அந்த அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் முக்கிய ஆட்டக்காரர்களில் ஒருவரான பேர்ஸ்டோ 8 ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்து வந்த பிரப் சிம்ரன் சிங் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 17 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் கேப்டன் தவான்  பொறுப்பாக ஆடி 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சாம் கரண்,  ஜித்தேஷ் சர்மா ஜோடி ஓரளவு அதிரடி காட்டியது. சாம் கரண் 17 பந்துகளில் 23 ரன்களும் ஜித்தேஷ் சர்மா 20 பந்துகளில் 27 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். கடைசி கட்ட ஓவர்களில் சஷாங் சிங்கின் 21 ரன்கள் பஞ்சாப் அணிக்கு கௌரவமான ஸ்கோரை எட்ட உதவியது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

பெங்களூர் அணி தரப்பில் சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் தயால், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி ஆடி வருகிறது. 6 ஓவர்கள் முடிவில் 50 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கேப்டன் டுபிளசிஸ் 3 ரன்களில் வீழ்ந்தார். க்ரீன் 3 ரன்களில்  ஆட்டமிழந்தார். கோலி 35 ரன்களுடனும், பட்டிதார் 3 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

Next Story

இந்தியாவின் சுழல் கூட்டணியால் ஆட்டம் கண்ட இங்கிலாந்து

Published on 07/03/2024 | Edited on 09/03/2024
England were played by India's spinning alliance

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டார்.

முதலில் களம் இறங்கிய கிராவ்லி, டக்கெட் இணை நிதானமாக ஆடத் தொடங்கியது. டக்கெட் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போப் 11 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிராவ்லி அரை சதம் கடந்து 79 ரன்களில் ஆட்டம் இழந்தார். பேர்ஸ்டோ 29 ரன்களில் வெளியேறினார். கடந்த ஆட்டத்தில் ஃபார்முக்கு வந்த நட்சத்திர ஆட்டக்காரர்  ஜோ ரூட் 24 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

England were played by India's spinning alliance

கேப்டன் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்களில்  ஃபோக்ஸ் 24, தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் சுழல் ஜாம்பவான் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 8 ஓவர்களில் 26 ரன்களுடன் ஆடி வருகிறது. ரோஹித் 20, ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

வெ.அருண்குமார்