உலகக்கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் இந்திய அணியின் ரோஹித் ஷர்மா தோனியின் மிகப்பெரிய சாதனையை இன்று முறியடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
ஒருநாள் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்தியர் வீரர்களின் பட்டியலில் 225 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் முதலிடத்தில் உள்ளார் தோனி. அதே நேரம் ரோஹித் ஷர்மா இதுவரை ஒருநாள் போட்டிகளில் 224 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
இந்நிலையில் இன்றைய போட்டியில் இன்னும் இரண்டு சிக்ஸர்கள் அடித்தால் 226 சிக்ஸர்களுடன் ரோஹித் இந்த பட்டியலில் முதல் இடம் பிடிப்பார். அதுமட்டுமல்லாமல் சர்வதேச அளவில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 4 வது இடத்தை பிடிப்பார்.
அதிக சிக்சர் அடித்தவர்கள் பட்டியலில், முதலிடத்தில் பாகிஸ்தானின் ஆல் ரவுண்டர் ஷாகித் அப்ரிதி (351) உள்ளார். வெஸ்ட் இண் டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் 324 சிக்சர்கள் விளாசி இரண்டாம் இடத்திலும், இலங்கையின் 270 சிக்ஸர்களுடன் ஜெயசூர்யா மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இவர்களுக்கு அடுத்த இடத்தில் தற்போது தோனி உள்ளார்.