2018 ஆம் ஆண்டின் 11வது ஐ.பி.எல் போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. அனைத்து அணிகளும் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன. இதில் மும்பை, டெல்லி இந்த இரு அணிகளும், இனி வரும் அனைத்து ஆட்டங்களிலும் ஜெயித்தால் மட்டுமே "ப்ளே ஆஃப்"க்குள் செல்ல வாய்ப்புள்ளது. தற்போது வரை மற்ற ஆறு அணிகளும் தங்களுக்கான வெற்றிக்கான சூழலை அமைத்துக்கொண்டே வருகின்றனர். இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கோப்பையை வெல்ல புது யுக்தியை கையாண்டு வருகிறது. ஆனால் இது கேப்டன் கோலியும், அணி நிர்வாகமும் வகுத்த யுக்திகள் அல்ல. ரசிகர் வகுத்த யுக்தி. கர்நாடகாவில் உள்ள 'ஹர்ஷா காஃபி' எனும் காஃபி ஷாப் வாடிக்கையாளர்களுக்கு போடும் பில்லில் 'இ சாலா கப் நமதே' என்று அந்த பில்லின் கீழ் அச்சிட்டு அளிக்கிறது. இதற்கு அர்த்தம் 'இந்த ஆண்டு கப் நமக்கே'.
ஆனால் இதுபோன்று அச்சிட்டு ஏப்ரல் 7 ஆம் தேதி ஐ.பி.எல் ஆரம்பித்தபொழுதுலிருந்து அளித்து வருகிறது. இன்னும் இந்த ஆண்டுக்கான கோப்பையையே பெங்களூர் அணி வெல்லுமா, வெல்லாத என்று தெரியவில்லை. அதற்குள் கடந்த 30 ஆம் தேதி முதல் 'நெக்ஸ்ட் சாலா கப் நம்தே' இதற்கு அர்த்தம் 'அடுத்த ஆண்டும் கப் நமக்கே'. ஆனால் இதுவரை நடந்த பத்து ஐ.பி.எல் சீசனில் மூன்று முறை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற பெங்களூர் அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. இந்த வருடம் தற்போது நிலவரப்படி நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணியை தோற்கடித்ததனால் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த இரண்டு பில்களும் தற்போது சமூகவலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பலர் இந்த பில் குறித்து பல விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.