Published on 23/09/2020 | Edited on 23/09/2020
![Yashasvi Jaiswal](http://image.nakkheeran.in/cdn/farfuture/nGehFru0TViaLbbGwKMx5VhUZsEOe2zlZA8LeEsCPuI/1600835467/sites/default/files/inline-images/rr-young-player-final.jpg)
சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது, தோனியைப் பார்த்த பரவசத்தில் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ஒருவர் கையெடுத்துக் கும்பிட்ட ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
13-வது ஐபிஎல் தொடரின் நான்காவது நாளான நேற்று, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் போட்டுவிட்டு, களத்திற்குள் இறங்க தயாராக இருந்த நேரத்தில் ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், தோனியை அருகில் பார்த்த மகிழ்ச்சியில் அவரைக் கையெடுத்து கும்பிட்டார். அந்த காட்சி அங்கிருந்த ஒரு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காணொளியை ரசிகர்கள் தற்போது அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.