
டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் ஃபெடரர் தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.
ஓய்வு குறித்து தனது ட்விட்டர் பதிவில் கடந்த மூன்று ஆண்டுகளாக காயங்கள் மற்றும் அறுவை சிகிச்சை போன்றவற்றால் கடுமையான பாதிப்பிற்கு உள்ளானதாகவும் அதில் இருந்து மீண்டு வர கடுமையாக போராடியதாகவும் கூறியுள்ளார். இதன் காரணமாக 2022 லேவர் கோப்பையுடன் ஓய்வு பெற இருப்பதாகவும் கூறியுள்ளார்.
2003ம் ஆண்டு விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்ற பின் தற்போது வரை 6 ஆஸ்திரேலிய ஓபன் 8 விம்பிள்டன் 5 அமெரிக்க ஓபன் என மொத்தம் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை ரோஜர் ஃபெடரர் வென்றுள்ளார்.
ரோஜர் ஃபெடரர் தனது ஓய்வினை அறிவித்ததற்கு ரஃபேல் நடால் தனது வருத்தத்தை ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார், அதில், “இந்த நாள் வரக்கூடாது என தான் விரும்பியதாகவும் இந்த நாள் எனக்கும் உலகம் முழுதும் உள்ள விளையாட்டுகள் அனைத்திற்கும் சோகமான நாள். களத்திற்கும் உள்ளேயும் வெளியேயும் பல அற்புதமான தருணங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி” என கூறியுள்ளார்.