Skip to main content

"அவர் திரும்புவது குறித்து உற்சாகமாக இருக்கிறோம்" - வெற்றிக்கு பிறகு ரஹானே!

Published on 29/12/2020 | Edited on 29/12/2020
rahane

 

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து பும்ரா 6 விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் சிராஜ் ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சிறப்பாக ஆடி சதமடித்த ரஹானே ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

வெற்றிக்கு பிறகு பேசிய கேப்டன் ரஹானே, வீரர்களை நினைத்து பெருமைப் படுவதாக கூறினார். மேலும் அறிமுக வீரர்கள் சிறப்பாக ஆடியதாகவும் ரஹானே பாராட்டியுள்ளார்.

 

 

இதுகுறித்து அவர், "வீரர்களை நினைத்து பெருமை கொள்கிறேன். அனைவரும் சிறப்பாக விளையாடினார்கள். அறிமுக வீரர்கள் சிராஜ் மற்றும் சுப்மன் ஆகியோர், அடிலெய்ட் தோல்விக்கு பிறகு ஆடிய விதம் பார்க்க சிறப்பாக இருந்தது. சுப்மன் கில்லின் முதல் தர கிரிக்கெட் கேரியர் பற்றி நாம் அறிவோம். சர்வதேச தரத்திலான போட்டிகளிலும் அடித்து ஆடும் விருப்பத்தை காட்டியுள்ளார். சிராஜ் தன்னால் கட்டுக்கோப்பாக பந்து வீச முடியும் என காட்டியுள்ளார். அறிமுக வீரர்கள் கட்டுகோப்பாக பந்து வீசுவது மிகவும் கடினம். இதில் தான் முதல் தர கிரிக்கெட் அனுபவம் கைகொடுக்கும் என நினைக்கிறேன்.

 

நாங்கள் பேசியதெல்லாம் களத்தில் நமது மனப்பான்மையையும், நோக்கத்தையும் வெளிக்காட்ட வேண்டும் என்பதே. உமேஷ் யாதவ் தேறி வருகிறார். ரோகித் சர்மா அணிக்கு திரும்ப இருப்பது குறித்து உற்சகமடைந்துள்ளோம். நேற்று அவருடன் பேசினேன். அவர் அணியோடு இணைய காத்துக்கொண்டிருக்கிறார்" என கூறியுள்ளார்.