கடந்த வியாழன் அன்று மும்பை டி20 லீக் 2018 க்கான இறுதிப்போட்டி மும்பையில் உள்ள வான்கேடி மைதானத்தில் ட்ரையம்ப் நைட்ஸ் மும்பை நார்த் ஈஸ்ட் அணிக்கும், சிவாஜி பார்க் லயன்ஸ் அணியும் மோதின இந்த ஆட்டத்தில் சிவாஜி பார்க் அணியை மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வென்று ட்ரையம்ப் நைட்ஸ் மும்பை நார்த் ஈஸ்ட் அணி பட்டத்தை கைப்பற்றியது.
இந்த ஆட்டம் முடிந்து பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டு இரு அணி வீரர்களுக்கும் பதக்கங்கள் வழங்கினர். அப்போது சிவாஜி பார்க் லயன்ஸ் அணியின் ஆலோசகரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளியை பதக்கம் பெறவருமாறு அழைத்தபொழுது, நேராக வந்து சச்சின் காலைத்தொட்டு ஆசிர்வாதம் வாங்கினார் . தனது நீண்டகால நண்பன் தனது காலைத்தொட்டு ஆசிர்வாதம் வாங்கியதும் அதிர்ச்சியடைந்த சச்சின் அவரைத்தூக்கி தோளைத்தட்டிக்கொடுத்து அவரிடம் சிரித்துப் பேசினார்.பின்னர் சுனில்கவாஸ்கரிடம் சென்று தனது பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.
1988 ஆம் ஆண்டு சச்சினும், காம்ப்ளியும் பள்ளி அளவிலான போட்டியில் ஜோடி சேர்ந்து 664 ரன்கள் குவித்து கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய சாதனை படைத்தனர். அப்பொழுது சச்சினை விட காம்ப்ளி சிறந்த வீரராக கருதப்பட்டார்.