காமன்வெல்த் விளையாட்டில் வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற புதுச்சேரி வீரர்
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியாவின் சார்பில் 18 பேர் கலந்துக்கொண்டனர். இதில் புதுச்சேரி தீயணைப்பு துறையில் பணியாற்றி வரும் வீரர் பாக்கியராஜ் கலந்துக்கொண்டு வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்றார். இதனையடுத்து ஊர் திரும்பிய பாக்கியராஜுக்கு புதுச்சேரியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.