புரோ கபடி லீக் 6-வது தோல்வியை சந்தித்தது தமிழ் தலைவாஸ் அணி!
புரோ கபடி லீக் 2017 இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டு வரும் போட்டி மேற்குவங்க மாநில தலைநகரான கொல்கத்தாவில் நேற்று 'பீ' பிரிவில் பெங்கால் வாரியர்ஸ், தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. போட்டியின் முதல் பாதியில் பெங்கால் அணி 18-9 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் தமிழ் தலைவாஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தமிழ் தலைவாஸ் அணி இரண்டாம் பாதியில் 9 புள்ளிகளை விட்டுக்கொடுத்து 14 புள்ளிகள் எடுத்தது. இருப்பினும் மொத்த புள்ளிகள் அடிப்படையில் பெங்கால் அணி 29-25 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம், தமிழ் தலைவாஸ் அணி 9 போட்டிகளில் இது 6-வது தோல்வியை சந்தித்துள்ளது. ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்தது.
அடுத்த போட்டி வரும் திங்கள் (4-ம் தேதி), நடைபெறும் லீக் போட்டிகளில் பாட்னா பைரேட்ஸ் - ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ், பெங்கால் வாரியர்ஸ் - அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றனர்.
பரிட்சை செய்கின்றன.