தமிழ் நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், மதுரை அணியை வீழ்த்திய திருவள்ளூர் வீரன்ஸ் அணி
தமிழ் நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மதுரை சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், திருவள்ளூர் வீரன்ஸ் அணிகளும் மோதின. மழை காரணமாகப் போட்டித் தாமதமாகத் தொடங்கியதால், 14 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
டாஸ் வென்று முதலில் களமிறங்கிய மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 14 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. 146 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு திருவள்ளூர் வீரன்ஸ் அணி தனது ஆட்டத்தைத் தொடர்ந்தது. ஆட்ட நேர முடிவில் 13.3 ஓவர்களில் 147 ரன்களை எடுத்து வெற்றிப் பெற்றது. இந்தத் தொடரில் திருவள்ளூர் வீரன்ஸ் அணியின் 3-வது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.