Skip to main content

நியூசிலாந்து சுற்றுப்பயணம்; இந்திய அணி அறிவிப்பு; முன்னணி வீரர்களுக்கு ஓய்வு

Published on 01/11/2022 | Edited on 01/11/2022

 

 New Zealand Tourism; Indian team announcement

 

இந்திய அணி தற்போது நடந்து வரும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடர் முடிந்த நான்கு நாட்களில் நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்கிறது. அங்கு மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.

 

நியூசிலாந்து அணியுடன் முதல் டி20 போட்டி வரும் 18 ம் தேதி நடைபெற இருக்கிறது. ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இருக்கும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

 

20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு :  ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), சுப்மன் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப்சிங், ஹர்ஷல் படேல், முகம்மது சிராஜ், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.

 

ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி : ஷிகர் தவான் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), சுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஷபாஸ் அகமது, சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப்சிங், தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.