ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் மீது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி கடும் நெருக்கடியைச் சந்தித்தது. அப்போது அந்த அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகியோர் மீது பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதை அவர்கள் மறுக்காமல் விட்டதால், அவர்களுக்கு தடைவிதித்தும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் பயிற்சியாளர் டேர்ரன் லெஹ்மென் மற்றும் கிரிக்கெட் வீரர் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகியோரின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியாகின. சம்பவத்தன்று, பான்கிராஃப்ட் பந்தை சால்ட் பேப்பரால் சேதப்படுத்தும் காட்சிகள் நேரலையில் சிக்க, அதைப் பார்த்த டேர்ரன் லெஹ்மேன் இதுகுறித்து ஹேண்ட்ஸ்கோம்பிடம் வாக்கி டாக்கி வழியாக தகவல் தெரிவித்ததாகவும், ஹேண்ட்ஸ்கோம்ப் கூறியபிறகே பான்கிராஃப்ட் சால்ட் பேப்பரை மறைக்க முயற்சி சிக்கிக்கொண்டார் என அந்தத் தகவல்கள் தெரிவித்தன.
இதனை ஹேண்ட்ஸ்கோம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இரண்டு வெவ்வேறு காட்சிகளை இணைத்து என்மீது அவதூறு பரப்புகிறார்கள். எனக்கு மிக அருகில் இருந்த பான்கிராஃப்டுடன் நான் சகஜமாகத்தான் பேசினேன். இந்தக் குற்றச்சாட்டில் துளியளவும் உண்மையில்லை என தெரிவித்துள்ளார்.