Published on 08/12/2020 | Edited on 09/12/2020

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டியில் விளையாடி இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
அடுத்து ஆஸ்திரேலியாவோடு டி20 போட்டியில் களம் கண்ட இந்திய அணி, 2-1 என்ற அடிப்படையில் தற்போது தொடரை வென்றுள்ளது. இன்று நடைபெற்ற கடைசி போட்டியில், 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த தொடரில் ஆட்ட நாயகன் விருதை, ஆல் ரவுண்டர் பாண்ட்யா பெற்றுள்ளார். விருதைப் பெற்ற அவர், அதனை தமிழக வீரர் நடராஜன் கையில் கொடுத்து மகிழ்ந்தார். இதுதொடர்பாக, ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், "என்னைப் பொறுத்த வரையில், நீங்கள்தான் தொடர் நாயகன், அதற்கான தகுதிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.