Published on 01/09/2019 | Edited on 01/09/2019
நாட்டின் பொருளாதார நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். பழிவாங்கும் அரசியலை விட்டுவிட்டு பொருளாதாரத்தை மீட்க தற்போதைய அரசு முயல வேண்டும் என தெரிவித்துள்ள அவர்,
மத்திய அரசின் தவறான மேலாண்மையால் இந்திய பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மந்த நிலைக்கு மோடி அரசே காரணம். கடந்த காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5 சதவிகிதம் என்ற அளவில் குறைந்துள்ளது இதனால் இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய நிலை கவலை அளிப்பதாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.