Skip to main content

ரொனால்டோ இல்லாத ரியல் மேட்ரிட்? - டேனி ஆல்வ்ஸ் கருத்து

Published on 19/09/2018 | Edited on 19/09/2018

ரொனால்டோ இல்லையென்றால் ரியல் மேட்ரிட் அணி இன்னமும் பலமானதுதான் என பிரபல கால்பந்தாட்ட வீரர் டேனி ஆல்வ்ஸ் தெரிவித்துள்ளார். 
 

ronaldo

 

 

 

க்ளப் கால்பந்தாட்ட அணிகளுக்கான புகழ்பெற்ற தொடரான யூ.இ.எஃப்.ஏ. லீக் தொடங்கவுள்ளது. இந்தத் தொடரில் வெற்றிபெறுவதன் மூலம் தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறது ரியல் மேட்ரிட் அணி. ஆனால், முதல் மூன்றுமுறை வெற்றி பெற்றபோது அணியில் முக்கியமான பொறுப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இருந்தார். தற்போது அவர் ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு ஜூவெண்டஸ் அணியில் சேர்ந்துவிட்டார்.
 

இருந்தாலும், விஷயம் இன்னமும் கடினமானதாகவே இருப்பதாக பாரிஸ் செயிண்ட் ஜெர்மன் அணியின் டிஃபெண்டர் டேனி ஆல்வ்ஸ் தெரிவித்துள்ளார். அவர், “ரியல் மேட்ரிட் இன்னமும் கடினமான அணியே. ரொனால்டோ இல்லாததால் எல்லோரும் அந்த அணியை குறைத்து மதிப்பிடுகிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை இனிமேல்தான் அந்த அணி பலமாக இருக்கப் போகிறது. ரொனால்டோ இல்லாதது பேரிழப்புதான் என்றாலும், மேட்ரிட் இன்னும் மேட்ரிட்தான்” என கூறியுள்ளார். மேலும், மேட்ரிட் அணியை வெல்வதற்கு பாரிஸ் செயிண்ட் ஜெர்மன் அணி முழுக்கமுழுக்க மாறுபட்ட உத்திகளைக் கையாள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.