Skip to main content

ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை: தொலைக்காட்சி நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஓடிடி!

Published on 02/11/2021 | Edited on 02/11/2021

 

ipl brodcasting rights

 

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகிறது. இந்த ஐபிஎல் போட்டிகளை 2008 - 2017ஆம் ஆண்டு வரை சோனி ஒளிபரப்பிவந்தது. அதன்பிறகு ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியது. அந்த நிறுவனம் 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமையை 16.348 கோடிக்கு ஏலம் எடுத்தது.

 

இந்தநிலையில், ஸ்டார் நிறுவனத்திற்கான ஒளிபரப்பு உரிமை அடுத்த வருடத்தோடு முடிவுக்கு வரவுள்ளதையடுத்து, 2023 முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஒளிபரப்பு உரிமையை விரைவில் பிசிசிஐ ஏலம் விடவுள்ளது. இந்நிலையில், இந்த ஒளிபரப்பு உரிமையை ஏலம் எடுக்க சோனி மற்றும் அமேசான் ப்ரைம் ஆகிய இரு நிறுவனங்களும் விரும்புவதாகவும், இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து இந்த ஏலத்தில் பங்கேற்கவுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஒளிபரப்பு உரிமையை ஏலம் விடுவதன் மூலம் குறைந்தபட்சம் 5 பில்லியன் டாலரை சம்பாதிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டிலிருந்து ஐபிஎல்-லில் 10 அணிகள் பங்கேற்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.