Skip to main content

கிறிஸ் கெயில் அணிக்கு எப்போது திரும்புவார்? பதிலளித்த கே.எல்.ராகுல்!

Published on 25/09/2020 | Edited on 25/09/2020

 

K.L. Rahul

 

 

கிறிஸ் கெயில் அணிக்கு எப்போது திரும்புவார் என்ற கேள்விக்கு, பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பதிலளித்துள்ளார்.

 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை, இந்திய வீரர் கே.எல்.ராகுல் கேப்டனாக இருந்து வழிநடத்துகிறார். தற்போதைய தொடரில், இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி ஒரு வெற்றியும், ஒரு தோல்வியும் கண்டுள்ளது. கடந்த தொடர்களை ஒப்பிடும்போது, இம்முறை பஞ்சாப் அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் கூடுதல் பலத்துடன் இருக்கிறது. இதனால், நடப்புத் தொடரில் அவ்வணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. 

 

பஞ்சாப் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெயில், கடந்த இரு போட்டிகளிலும் அணியில் இடம்பெறாததால் அவர் எப்போது அணியில் இணைவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கிறிஸ் கெயில் அணியில் இணையும் போது, அணிக்கு அது கூடுதல் பலமாக இருக்கும் என்பதால் பஞ்சாப் அணி ரசிகர்கள் அதை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியுள்ளனர். இதுகுறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

 

அதற்கு பதிலளித்த கே.எல்.ராகுல், "கிறிஸ் கெயில் சரியான நேரத்தில் வருவார். அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. வீட்டில் இருப்பது என்பது கடினமான ஒன்று. தற்போதைய சூழலில் விளையாட வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் போட்டி சற்று சறுக்கலாக அமைந்தாலும், எங்கள் வீரர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்" எனக் கூறினார்.

 

 

Next Story

ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் கே.எல். ராகுல்; காயம் காரணமாக முடிவு 

Published on 05/05/2023 | Edited on 05/05/2023

 

KL Rahul withdraws from IPL series; Termination due to injury

 

லக்னோ அணிக்கு கேப்டனாக செயல்பட்ட கே.எல். ராகுலுக்கு மே 1 ஆம் தேதியில் நடந்த பெங்களூர் அணியுடனான போட்டியில் ஃபீல்டிங் செய்தபோது காலில் காயம் ஏற்பட்டது. இதன் பின் சென்னை அணியுடனான போட்டியிலும் ராகுல் விளையாடவில்லை. ராகுலின் விலகலைத் தொடர்ந்து லக்னோ அணிக்கு குருணால் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார். 

 

ராகுல் காலில் ஏற்பட்ட காயம் தீவிரமடைந்துள்ளதால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக லக்னோ அணி கேப்டன் கே.எல். ராகுல் அறிவித்துள்ளார். ராகுலின் விலகலைத் தொடர்ந்து எஞ்சியுள்ள போட்டிகளிலும் லக்னோ அணியின் கேப்டனாக குருணால் பாண்டியா செயல்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

அதேபோல் இந்தாண்டில் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்தும் காயம் காரணமாக கே.எல்.ராகுல் விலகியுள்ளார். ஏற்கனவே ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா ஆகியோர் அணியில் இடம் பெறாத நிலையில் தற்போது கே.எல்.ராகுலும் அணியில் இருந்து காயம் காரணமாக விலகி இருப்பது அணிக்கு மிக பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

 

ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் இல்லாததை ஈடு செய்யும் விதமாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள ரஹானேவை போல் கே.எல்.ராகுல் வெளியேறியதை ஈடு செய்ய யார் அணியில் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

 

 

Next Story

கே.எல்.ராகுலிடம் இருந்து துணைக் கேப்டன் பதவி பறிப்பு?

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

Deprived of vice-captaincy from KL Rahul?

 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் சிறப்பாக ஆடிய இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

 

டெல்லியில் அருண்ஜெட்லி மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணிக்கு சுழல் கைகொடுக்க சிரமம் ஏதும் இன்றி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை தக்க வைத்தது. 

 

ஆயினும் இந்திய அணியின் துணைக்கேப்டன் கே.எல்.ராகுல் தொடர்ச்சியாக 4 இன்னிங்ஸ்களிலும் பெரிதாக சோபிக்கவில்லை. இரு டெஸ்ட் போட்டிகளையும் சேர்த்து இந்திய அணியின் மூன்று இன்னிங்ஸ்களில் 38 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். மேலும் கடந்த சில மாதங்களாகவே அவர் பெரிய இன்னிங்ஸ்களை ஆடாததும் குறிப்பிடத்தக்கது. 

 

மேலும், கடந்த சில ஆண்டுகளில் எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச வாய்ப்புகள் கே.எல்.ராகுலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் தன் திறமையை நிரூபிக்கவில்லை. திறமையான வீரர்கள் வெளியில் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர் என கே.எல்.ராகுலுக்கு எதிராக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் போர்க்கொடி தூக்கினர். 

 

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ராகுலின் பெயர் இடம்பெற்று இருந்தாலும் துணைக்கேப்டன் என்று கே.எல்.ராகுல் குறிப்பிடப்படவில்லை. இதனால் தற்போது இந்திய அணியின் அடுத்த துணைக்கேப்டன் யார் என்றும் அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளில் கே.எல்.ராகுல் விளையாடுவாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. 

 

அடுத்த இரு போட்டிகளுக்கான இந்திய டெஸ்ட் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷ்ரேயஸ் ஐயர் , சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்.