உலகக்கோப்பையில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய அந்த அணி இந்திய ஸ்பின்னர்களை வெளுத்து வாங்கியது. குல்தீப் மற்றும் சாஹல் ஓவர்களில் 140 ரன்களுக்கு மேல் அடித்து அதிரடி காட்டியது இங்கிலாந்து அணி. 337 ரன்களை அடித்த அந்த அணி 338 என்ற கடினமான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது. இதனையடுத்து ஆடிய இந்திய அணி ரன்கள் எடுக்க திணறிய நிலையில் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரோஹித் ஷர்மாவிடம் ரிஷப் பந்த் முதன்முறையாக வந்தார். அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது. அவர் விளையாட வந்த போது உங்களுக்கு ஆச்சரியமாக இருந்ததா என கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு சிறிது நேரம் சிரித்தபடியே யோசித்த அவர், "அவர் விளையாட வருவதை பார்க்க எனக்கு ஆச்சரியமாக இல்லை. இந்திய ரசிகர்கள் தான் ரிஷப் பந்தை சேர்க்க வேண்டும் என தொடர்ந்து கூறினார்கள். பந்த் எங்கே? எங்கே? என கேட்டார்கள். அதனால் நாங்கள் அவரை நான்காம் இடத்தில் விளையாட வைத்தோம். மேலும் அவரிடம் இருந்து இந்த காலகட்டத்தில் மிகச்சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்ப்பது என்பது முடியாது" என கூறினார்.