Published on 26/06/2019 | Edited on 26/06/2019
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரரான இம்ரான் தாஹிர் விக்கெட் எடுத்தவுடன் அதனை கொண்டாடும் விதமாக மைதானத்தில் நீண்ட தூரம் ஓடுவார். சிஎஸ்கே அணியின் விளையாடும் இவரை பராசக்தி எஸ்பிரஸ் என்று அழைக்க காரணமாக அமைந்ததே அவரின் இந்த ஓட்டம்தான்.

இப்படி ஓட்டத்தால் பிரபலமான இவரின் ஓட்டத்தை கலாய்த்து பாகிஸ்தான் தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதில் தமிழக ரசிகர்களுக்கு எக்ஸ்ட்ரா மகிழ்ச்சியாக, சென்னை பஸ் டே கொண்டாட்ட விடியோவும் உள்ளது. தாஹிர் குறுக்கே ஓடியதால் பைக்கில் சென்ற மாணவர்கள் பிரேக் அடித்தது போல அது எடிட் செய்யப்பட்டுள்ளது.
Imran Tahir - the new age Usain Bolt ??? pic.twitter.com/rGsTMuttia
— Fazeela Saba Kashif (@saba_fazeela) June 25, 2019