Published on 09/01/2019 | Edited on 09/01/2019

2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நடைபெறும் இடம் மற்றும், தொடங்கும் தேதி ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. நேற்று உச்சநீதிமன்றம் அமைத்த ஒழுங்குபடுத்தும் குழுவும் பிசிசிஐ யும் சேர்ந்து மேற்கொண்ட ஆலோசனைக்கு பிறகு இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்தியாவிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பொது தேர்தல் வருவதால் வெளிநாடுகளில் ஐபிஎல் நடத்தப்படும் என்ற பேச்சு அடிபட்டு வந்தது. ஏற்கனவே பொது தேர்தல் நடந்த 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் தொடர் வெளிநாடுகளில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தொடர் இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் தொடக்க விழா மார்ச் 23 ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.