Skip to main content

822 வீரர்களை நிராகரித்த ஐபிஎல் அணி உரிமையாளர்கள்!

Published on 12/02/2021 | Edited on 12/02/2021

 

ipl

 

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் விரைவில் நடக்கவுள்ள நிலையில், ஐபிஎல் ஏலம் வரும் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

 

பொதுவாக ஐபிஎல் ஏலத்திற்கு, அணிகளில் இடம்பெறாத வீரர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்வார்கள். இதில் புதிய வீரர்கள் மட்டுமின்றி, அணிகளால் கழட்டிவிடப்பட்டவர்களும் அடங்குவர். அப்படி பதிவு செய்துகொண்ட வீரர்களின் பட்டியல், அனைத்து ஐபிஎல் அணி உரிமையாளர்களுக்கும் அனுப்பப்படும். அப்படி அனுப்பப்பட்ட பட்டியலில் இருந்து அணி உரிமையாளர்கள், தாங்கள் ஏலத்தில் எடுக்க விரும்பும் வீரர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

 

இவ்வாறு அணி உரிமையாளர்கள், அணியிலெடுக்க விரும்பும் வீரர்கள் மட்டுமே ஏலத்தில் இடம்பெறுவர். ஏற்கனவே இந்த ஆண்டிற்கான ஏலத்தில் 1,114 வீரர்கள் இடம்பெற்ற நிலையில், 292 வீரர்களை மட்டுமே தங்கள் அணிகளில் எடுக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். 822 வீரர்களை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை.

 

தற்போது அணிகள் எடுக்க விரும்பிய வீரர்களின் பட்டியல் வெளியாகிவுள்ளது. அதில் ஹர்பஜன் சிங், கேதர் ஜாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சூதாட்ட புகாரில் சிக்கி மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ள ஸ்ரீசாந்த் இடம்பெறவில்லை. அர்ஜுன் டெண்டுல்கரும் இறுதி ஏலப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.