Skip to main content

சர்வதேச பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்று இந்திய வீராங்கனை சாதனை!

Published on 30/11/2017 | Edited on 30/11/2017
சர்வதேச பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்று இந்திய வீராங்கனை சாதனை!

உலக அளவிலான பளுதூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனை ஒருவர் முதன்முதலாக உலக சாம்பியன் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.



அமெரிக்காவின் அனஹேம் பகுதியில் உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 48 கிலோ எடைப்பிரிவினருக்கான போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டார் மீராபாய் சானு. அப்போது 84 கிலோ ஸ்நாட்ச், 109 கிலோ க்ளீன் மற்றும் ஜெர்க் என மொத்தம் 194 கிலோ எடையைத் தூக்கி அசத்தினார் அவர். சர்வதேச போட்டியில் இந்தியர் ஒருவர் தூக்கும் அதிகபட்ச பளு என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

1995ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் கர்ணம் மல்லேஸ்வரி தங்கப்பதக்கம் வென்றார். அது நடந்து 20 ஆண்டுகள் கழித்து தற்போது, இந்திய வீராங்கனை ஒருவர் மீண்டும் தங்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மீராபாய் தானுவிற்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. 

சார்ந்த செய்திகள்