திட்டமிட்டபடி இந்தியாவில் பெண்களுக்கான ஜூனியர் பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.
சர்வதேச கால்பந்து சம்மேளனம் இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடையை 12 நாட்கள் கழித்து நீக்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகத்தில் மூன்றாம் நபரின் தலையீடு இருப்பதாக கூறி சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு இடைக்கால தடை விதித்திருந்தது.
இதனால் இந்தியாவில் நடைபெற இருந்த ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பாக இந்திய கால்பந்து கூட்டமைப்பு உச்சநீதி மன்றத்தில் முறையிட்டது. இதனை அடுத்து உச்சநீதிமன்றம் அமைத்த குழுவை நீக்கி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய செப்டம்பர் இரண்டாம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடையை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு நீக்கியது. இதன் மூலம் இந்தியாவில் அக்டோபர் 11ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.