Published on 27/01/2019 | Edited on 27/01/2019

டென்னிஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் பரபரப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் செர்பிய வீரரான ஜோகோவிச் ஸ்பெயின் வீரர் நடாலை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் செட் முதலே ஆதிக்கம் செலுத்திவந்த ஜோகோவிச் 6-3, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் நடாலை வீழ்த்தினார். இதன் மூலம் 7-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் செர்பியாவின் ஜோகோவிச். இதன் மூலம் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக முறை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை ஜோகோவிச் படைத்துள்ளார்.