Skip to main content

சர்ப்ரைஸ் : இன்றைய போட்டியில் தோனிதான் கேப்டன்! 

Published on 25/09/2018 | Edited on 25/09/2018
Dhoni

 

 

 

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி, தனது மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. ஏற்கெனவே, இந்திய அணி ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டி மீது பெரிய கவனம் எதுவும் திரும்பவில்லை. இந்த நிலையில்தான் தோனி இந்திய அணியின் கேப்டனாக இன்று செயல்படுவார் என்ற சர்ப்ரைஸ் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
 

துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டிக்கான டாஸ் போடுவதற்காக இருநாட்டு கேப்டன்களும் மைதானத்திற்குள் வந்தனர். அப்போது இந்திய அணியின் சார்பில் தோனி களமிறங்கியதும் மைதானத்தில் தோனி முழக்கம் ஒலிக்கத் தொடங்கியது. போட்டியில் விளையாட இருக்கும் 11 பேர் லிஸ்டிலும் கேப்டன் ரோகித் சர்மாவின் பெயர் இல்லாததால், தோனிதான் இன்றைய கேப்டன் என்று உறுதி செய்யப்பட்டது. இறுதிப்போட்டிக்காக ரோகித் சர்மா மற்றும் சிகர் தவானுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக கே.எல்.ராகுல் மற்றும் மணீஷ் பாண்டேவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 
 

 

 

இந்த சர்ப்ரைஸ் கேப்டன் பொறுப்பு குறித்து தோனி கூறியதாவது, “இந்திய அணியின் கேப்டனாக 199 போட்டிகளில் செயல்பட்டிருக்கிறேன். ஆனால், 200 போட்டிகள் என்ற எண்ணிக்கையை அடைய முடியவில்லை. அந்தக் குறையை இன்றைய போட்டி தீர்த்து வைத்துள்ளது” என தனக்கே உரித்தான பாணியில் தெரிவித்துள்ளார்.
 

சென்ற ஆண்டு கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகினார். அவரை மீண்டும் கேப்டனாக பார்த்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்ததாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.