Published on 15/10/2021 | Edited on 15/10/2021
![Chennai vs Kolkata final ipl match in dubai](http://image.nakkheeran.in/cdn/farfuture/ktEGpe4JtQTxmdnaBrUd0OHce3ScI10Nh2FLPlETrho/1634313434/sites/default/files/inline-images/csk33322.jpg)
ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வெற்றி இலக்காக 193 ரன்களை நிர்ணயித்துள்ளது.
துபாயில் இன்று (15/10/2021) இரவு 07.00 மணிக்கு துபாய் இன்டர்நேஷ்னல் கிரிக்கெட் மைதானத்தில் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக டூ பிளஸ்ஸிஸ் 86, மொயின் அலி 37, ருத்ராஜ் 32, உத்தப்பா 31 ரன்களை எடுத்தனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் சுனில் நரைன் 2, ஷிவம் மாவி ஒரு விக்கெட் வீழ்த்தினர். அதைத் தொடர்ந்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது.