Skip to main content

முத்தரப்பு கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி சாம்பியன்

Published on 26/08/2017 | Edited on 26/08/2017
முத்தரப்பு கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி சாம்பியன் 

இந்தியா, மொரிசியஸ், செயிண்ட் கிட்ஸ் ஆகிய மூன்று நாடுகள் பங்குபெறும் முத்தரப்பு கால்பந்து தொடர் மும்பையில், 19-ம் தேதி தொடங்கியது. முதல் போட்டியில் இந்தியா – மொரீசியஸ் அணிகள் மோதியதில், இந்திய அணி வென்றது. 2-வது போட்டியில், செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் – மொரிசியஸ் அணிகள் மோதின. இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. 3-வது மற்றும் கடைசி போட்டியில் இந்திய அணி-செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் அணியை எதிர்கொண்டது. இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு, சமனில் போட்டி முடிவு பெற்றது. புள்ளிப்பட்டியலில், ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் 4 புள்ளிகள் எடுத்த இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

சார்ந்த செய்திகள்