Skip to main content

AUSvsSA : தொடரும் தென் ஆப்பிரிக்காவின் கனவு; இறுதியை உறுதி செய்த ஆஸ்திரேலியா!

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

Australia qualified for finals worldcup semi final

 

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதி ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இன்று (16.11.2023) இடையே நடைபெற்றது. தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். தொடக்க ஆட்டக்காரர் டி காக் 3 ரன்னில் வெளியேற, கேப்டன் பவுமா 0 என மீண்டும் சொதப்பினார். டுசைன் 6, மார்க்ரம் 10 என வெளியேற 24-4 என தடுமாறியது. அடுத்து வந்த டேவிட் மில்லர், க்ளாசென் இணை நிதானமாக விளையாடி, அணி ஓரளவு நல்ல ஸ்கோர் பெற உதவினர்.

 

சிறப்பாக ஆடிய டேவிட் மில்லர் சதமடித்து 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவருக்கு கை கொடுத்த க்ளாசென் 47 ரன்களும், கோட்ஸி 19 ரன்களும் எடுத்தனர். இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஹேசில்வுட், டிராவிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஹெட், வார்னர் சிறப்பான துவக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு அந்த இணை 60 ரன்கள் எடுத்தது. வார்னர் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து வந்த ஸ்மித் நிதானமாக ஆடத் தொடங்கினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ஹெட் அரை சதம் அடித்து 62 ரன்களில் ஆட்டமிழந்தார். லபுசேன் 18 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மேக்ஸ்வெல் 1 ரன்னில் வெளியேறினார். பொறுமையாக ஆடிய ஸ்மித் 30 ரன்களுக்கு ஆட்டமிழக்க ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியது.

 

AUSvsSA : Australia advanced to the finals

 

இங்லிஸ், ஸ்டார்க் இணை வெற்றியை நோக்கி நடைபோடத் தொடங்கிய நிலையில் இங்லிஸ் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்க அணிக்கு மேலும் 3 விக்கெட்டுகள் தேவைப்பட, ஆஸ்திரேலிய அணிக்கோ 20 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டார்க், கேப்டன் கம்மின்ஸ் இணை நிதானமாக ஆட ஆஸ்திரேலிய அணி 47.2 ஓவர்களில் 215 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்க அணி சார்பில் கோட்ஸி, ஷம்ஸி தலா 2 விக்கெட்டுகளும், மார்க்ரம், ரபாடா, மஹராஜ் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். ட்ராவிஸ் ஹெட் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் 8 ஆவது முறையாக ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. வரும் நவம்பர் 19 ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாட உள்ளது. 

 

மற்ற ஆட்டங்களில் எல்லாம் சிறப்பாக விளையாடி உலகக் கோப்பை போன்ற முக்கியமான தொடர்களில் தென் ஆப்பிரிக்க அணி அவ்வளவு சிறப்பாக விளையாடாது எனும் வரலாறு தொடர்கிறது. 1999 இல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதியில், இதே ஆஸ்திரேலிய அணியிடம் தென்னாப்பிரிக்க அணியின் ஆட்டம் டையில் முடிந்தது. லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணியை வெற்றி பெற்றிருந்ததன் அடிப்படையில், ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 213 ரன்களை எடுத்தது. இந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணிக்கு இலக்காக 213 ரன்களை தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயித்தது சுவாரசியமாக அமைந்தது. 2007 உலகக் கோப்பை அரையிறுதியிலும் ஆஸ்திரேலிய அணியிடம், தென் ஆப்பிரிக்க அணி தோற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

- வெ.அருண்குமார்

 

 

 

 

Next Story

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 6 பேர் பலி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Mall incident in australia

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி பகுதியில், மிகப்பெரிய பிரபல தனியார் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்ட அந்த வணிக வளாகத்தில் இருந்த மக்கள் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடினர். மர்ம நபர் ஒருவர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகளை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த வணிக வளாகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக அவசர அவசரமாக போலீசாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Mall incident in australia

வணிக வளாகத்தில் நடந்த தாக்குதல் தொடர்பான பதிவுகளில் வணிக வளாகத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதையும், போலீசார் மற்றும் அவசர சேவை வாகனங்கள் அப்பகுதிக்கு விரைவதையும் காண முடிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரபல தனியார் வணிக வளாகத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

12 வயது சிறுமியை சமய சடங்குகளோடு திருமணம் செய்த 63 வயது மதபோதகர்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
A 63-year-old priest who married a 12-year-old girl with religious rituals in africa

ஆப்பிரிக்கா நாடான கானாவின், நுங்குவா பகுதியில் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பூர்வகுடி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு இதே பகுதியைச் சேர்ந்த நூமோ பார்கடே லாவே சுரு (63) என்பவர் மத போதகராக இருந்து வருகிறார். 

இந்த நிலையில், கடந்த மார்ச் 30ஆம் தேதி அன்று நுங்குவா பகுதியில் திருவிழா போன்ற ஒரு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில், மதபோதகர் நூமோ பார்கடே, அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியை சமய சடங்குகளை முன்னிறுத்தி தனது பக்தர்களின் ஆசியோடும், வாழ்த்துகளோடும் பகிரங்கமாக திருமணம் செய்துள்ளார். இது தொடர்பான, புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், 12 வயது சிறுமியை, 63 வயது மதபோதகர் ஒருவர் திருமணம் செய்தது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மதபோதகர் தரப்பில் தெரிவித்துள்ளதாவது, ‘அந்த சிறுமிக்கு 6 வயது இருக்கும்போதே தனது மனைவியாக மதபோதகர் தேர்வு செய்துவிட்டதாகவும், தற்போது நடைபெற்ற திருமணம் சமய சடங்கு சார்ந்த திருமணம் தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இந்த விவகாரம் குறித்த விசாரணையில், அந்த சிறுமி மதபோதகரைக் கணவனாக ஏற்று குழந்தை பேறுக்கு தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதை அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயார் இருவரையும் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர். கானா நாட்டு சட்டப்படி, 18 வயது பூர்த்தி ஆனவர்கள் மட்டுமே திருமணம் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.