இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, நாளை (07.01.2021) சிட்னியில் தொடங்கவுள்ளது. தற்போது, இந்தப் போட்டியில் விளையாடும், 11 பேர்கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத ரோகித் சர்மா இடம்பெற்றுள்ளார். மேலும் அவர், இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இருபோட்டிகளிலும் சரியாக விளையாடாத மயங்க் அகர்வால் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல், காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவுக்குப் பதிலாக சைனி சேர்க்கப்பட்டுள்ளார். நாளைய போட்டியில் அவர் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளைய போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய அணி வருமாறு: ரஹானே, ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ஜடேஜா, அஸ்வின், பும்ரா, சிராஜ், சைனி.