Published on 30/12/2020 | Edited on 30/12/2020

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரும், ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணிகளின் துணை கேப்டனுமான ரோகித் சர்மா ஐபிஎல் தொடரின்போது காயமடைந்தார். காயம் முழுமையாகக் குணமடையாததால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இடம்பெறவில்லை. முழு உடல்தகுதி பெற்றால், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறுவார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் உடல் தகுதியை நிரூபித்த ரோகித் சர்மா, ஆஸ்திரேலியா சென்றாலும் கரோனா தடுப்பு நடைமுறையாகத் தனிமையில் இருந்தததால் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை.
இந்தநிலையில் ரோகித் சர்மா, 14 நாள் தனிமைக்குப் பிறகு, இன்று இந்திய அணியோடு இணைந்தார். அணியோடு இணைந்த ரோகித் சர்மாவை இந்திய அணி வீரர்கள் வரவேற்றனர்.