அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-ஆவது ஐபிஎல் தொடரின் இரண்டாம் தகுதிச்சுற்று நேற்று நடைபெற்றது. டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய இப்போட்டியில், 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
கடந்த 7-ம் தேதி இலங்கை அணியின் முன்னாள் வீரரான ரஸ்ஸல் அர்னால்ட் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், அஸ்வின், உன்னுடைய கால் விரலை நடராஜன் முறிக்கப் போகிறார். அஸ்வின் தடுமாறுவதைப் பார்க்க அனைவரும் தயாராக இருங்கள் என்கிற தொனியில் நகைச்சுவையாக ஒரு ட்வீட் செய்திருந்தார்.
டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெற்ற வெற்றியையடுத்து, டெல்லி அணி வீரரான அஸ்வின், ரஸ்ஸல் அர்னால்ட்டின் ட்வீட்டை மேற்கோள் காட்டி என்ன அய்யாச்சாமி... சவுண்டவே காணும் எனப் பதிலளித்துள்ளார். அஸ்வினின் இந்த ட்வீட்டானது தற்போது வைரலாகி வருகிறது.