தோனி ஓய்வு குறித்த கணிப்புகள் மற்றும் வதந்திகள் தொடர்ந்து சமூகவலைதளங்களில் பரவி வரும் நிலையில், இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி பதிலளித்துள்ளார்.
![kohli about dhoni retirement rumours](http://image.nakkheeran.in/cdn/farfuture/VmyW31SLh3xskyl1Qd_8wEsmAM2TuIJS2cqgbMhEAbQ/1568462376/sites/default/files/inline-images/koh-dho.jpg)
கடந்த 12 ஆம் தேதி தோனி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்போவதாகவும், அதில் தனது ஓய்வு முடிவை அறிவிக்கப்போவதாகவும், இணையத்தில் தகவல்கள் பரவின. ஆனால் அதெல்லாம் வதந்தி மட்டுமே என எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்தார். இந்த நிலையில் கோலியிடம் தோனியின் ஓய்வு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "வாழ்வில் அனுபவமே எப்போதும் முக்கியமானது. வயது என்பது எண் மட்டுமே. இந்த கூற்றை இதற்கு முன்னாள் பல வீரர்கள் நிரூபித்து காட்டியிருக்கிறார்கள். தோனியும் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் நிரூப்பித்திருக்கிறார். தோனியிடம் சிறப்பான விஷயம் என்னவென்றால் அவர் எப்போதும் இந்திய கிரிக்கெட்டை நேசிக்கிறார். எப்போது கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்த வேண்டும் என்பது முற்றிலுமான தனி நபர் சம்பந்தப்பட்ட முடிவு. இதில் யாரும் கருத்து கூற முடியாது” என தெரிவித்துள்ளார்.