கழுத்து எலும்பு தேய்மான நோய் குறித்து நமக்கு ஹோமியோபதி மருத்துவர் ஆர்த்தி விளக்குகிறார்.
வயது ஆக ஆக கழுத்து எலும்பில் தேய்மானம் அதிகரிக்கும். ஒரு காலத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கே இந்த நோய் ஏற்பட்டது. இப்போது 30 வயதிலேயே இந்த நோய் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கும் இது ஏற்படுகிறது. தொடர்ந்து கழுத்துக்கு நாம் அதிகம் வேலை கொடுப்பது, அதிகமாக மொபைல், லேப்டாப் பயன்படுத்துவது, கனரக வாகனங்கள் ஓட்டுவது ஆகியவற்றின் மூலம் கழுத்து எலும்பில் தேய்மானம் அதிகரிக்கும். கழுத்து பகுதியில் ஏற்கனவே அடிபட்டிருந்தாலும் இந்தப் பிரச்சனை ஏற்படும்.
வயதானவர்கள் வலி நிவாரணத்துக்காக தைலம் தேய்ப்பார்கள். சிறுவயதில் இந்த நோய் ஏற்படும்போது பிசியோதெரபி எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக இதில் கழுத்து வலி இருக்கும், கழுத்தைத் திருப்புவதற்கு கடினமாக இருக்கும், கழுத்தைச் சுற்றியுள்ள எலும்புகள் கடினமாக இருக்கும். அந்த சமயங்களில் ஒரு பொருளைக் கையில் பிடிப்பது கூட கடினமாக இருக்கும். கையில் ஆரம்பித்து கால் வரை கூட வலி ஏற்படும். ஆரம்பக் கட்டத்திலேயே இதற்கான சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்.
ஹோமியோபதி மூலம் இதனை முழுமையாக குணப்படுத்தலாம். நோயாளிகளுக்கு ஏற்படும் அறிகுறிகளை அறிந்து அதற்கேற்ற வகையில் சிகிச்சை வழங்கப்படும். நிச்சயமாக பிசியோதெரபி செய்ய வேண்டும். வலி ஏற்படும் இடத்தில் ஒருமுறை ஐஸ் பேக், ஒரு முறை ஹாட் பேக் என்று வைக்கலாம். தூங்கும் முறையும் இதில் முக்கியமானது. கை தூக்குவதில் ஏற்படும் சிக்கல், கழுத்தைத் திருப்புவதில் ஏற்படும் சிக்கல், கை உணர்ச்சியற்றுப் போதல், நடப்பதில் ஏற்படும் சிரமம் ஆகியவையே இதற்கான முதற்கட்ட அறிகுறிகளாக இருக்கும். எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் ஆகியவற்றின் மூலம் நோயாளியின் நிலை கண்டறியப்படும்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இயற்கையான பசும்பால் எடுத்துக்கொள்ளலாம். கீரை வகைகள், நட்ஸ், காய்கறிகள், பழங்களைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். வயது ஆக ஆக எலும்பு சுருங்கிவிடும் வாய்ப்பு இருக்கிறது. முதலில் வலி ஏற்படும்போது அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரிடம் சென்று பரிசோதனைகள் செய்து சரியான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும்போது அப்போதைக்கு வலி குறையும். ஆனால் அது சிறுநீரகத்தை பாதிக்கும்.