உலகமே கரோனா என்கின்ற கொடிய நோய்க்கு எதிராக போராடி வரும் இந்த சுழலில், சில வேடிக்கையான, விதித்திரமான, சுவாரஸ்யமாக நிகழ்வுகளும் அவ்வப்போது அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இன்றைய நவீன கால கட்டத்தில் கரோனா என்கின்ற கொடிய வைரஸ் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக மக்கள் பலர் தங்களது வீட்டில் இருக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது அனைவராலும் மறுக்க முடியாத உண்மை.
வெளிநாட்டில் பணிபுரிய சென்றோர் தங்களது வேலைகளை இழந்து சொந்த நாடு திரும்பினர். உள்நாடுகளின் பணிபுரிவோர் தங்களது வேலைகளை வீட்டிலேயே பணிபுரியும் சூழ்நிலை அமைந்தது. இந்த சூழலில், வீட்டில் இருக்கும் பெரும்பாலான மக்கள் தங்களது ஓய்வு நேரத்தினை இணையத்தில் செலவிடுகின்றனர். அவ்வப்போது, சமூக வலைதளங்களில் கூட பெரும்பாலான வீடுகளில் பெண்கள் ஆண்களின் முடியை வெட்டுவது போன்ற ஏராளமான வீடியோக்கள் வைரலாகின.
அவற்றுள் பெருவாரியான மக்கள் சமூக வலைதளங்களில், அழகு குறிப்புகளை தேடுவதில் அதிக நாட்டம் உடையவர்களாக இருக்கிறார்கள். இந்த ஆண்டு கூகுளில் மக்கள் தேடிய தலைப்புகளின் மூலம் இது தெளிவாகத் புரிந்து கொள்ள முடிந்தது. இது தொடர்பாக ஃபேஷன்ஸ்டா காமில் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்த 2020 ஆண்டும் கூகுள் தேடலில் முதலிடம் பிடித்த தலைப்புகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் பயனர்கள் கூகுளில் அதிகம் தேடிய தலைப்புகளில் பேஷன்-அழகு-ஷாப்பிங் தொடர்பான தேடல்கள் அதிக அளவில் இடம்பெற்றிருந்தன அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது அதிக எண்ணிக்கையில் உள்ளன.
அழகு குறிப்புகளில் அதிகம் தேடப்பட்டவையாக, வீட்டில் முடி வெட்டுவது எப்படி, குறிப்பாக வீட்டில் ஆண்களின் முடியை வெட்டுவது எப்படி, முகப்பரு போன்றவற்றை எவ்வாறு அகற்றுவது, முகக் கவசம் எங்கு வாங்குவது, வீட்டில் உங்கள் தலைமுடிக்கு எப்படி வண்ணம் பூசுவது, கைகளை எப்படி கழுவ வேண்டும். சானிடைசர் (sanitizer) எங்கு வாங்குவது தொடர்பான தேடல்கள் முதலிடத்தில் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.
மேலும், தோல் பராமரிப்பு தொடர்பான பல்வேறு கேள்விகள் இருந்தன, குறிப்பாக வைட்டமின் சி மற்றும் ஹைலூரோனிக் அமிலம் பற்றி பல கேள்விகள் இருந்தன.
இவற்றினுள் ஒரு பகுதி மக்கள் பிரபல ஆடைகளை இணையத்தில் தேடுவதில் அதிக நாட்டம் உடையவர்களாக காணப்பட்டனர். அவற்றினுள், மிக சிறப்பு வாய்ந்த மெலனியா டிரம்ப் ஆடை (Melania Trump outfit), ஹாரி ஸ்டைல்ஸ் ஆடைகள் (Harry Styles outfits), ஷகிரா சூப்பர் பவுல் ஆடை (shakira Super Bowl outfit),நோவா சைரஸ் ஆடை (Noah Cyrus outfit),மரியா டெய்லர் ஆடை (Maria Taylor outfit),லில் நாஸ் எக்ஸ் கிராமி ஆடை ( Lil Nas X Grammy outfit),பில்லி எலிஷ் கிராமி ஆடை ( Billie Eilish Grammy outfit), பாடகி லிசோ கூடைப்பந்து விளையாட்டு ஆடை (Lizzo basketball game outfit), ஜெனிபர் லோபஸ் சூப்பர் பவுல் ஆடை, டிராவிஸ் ஸ்காட் நாட்மேன் (Travis Scott Natman outfit) ஆடை போன்றவை சிறப்பு வாய்ந்தவை.
இன்னும், சிலர் பேஷன் தொடர்பான கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருத்திருந்தனர். இண்டி ஸ்டைல் (Indie style), அர்பன் ஸ்டைல் (Urban style), ஸ்ட்ரீட் வியர் ஸ்டைல் (Streetwear style), 90s கிட்ஸ் ஸ்டைல் (80s style clothing), 2k கிட்ஸ் ஸ்டைல் (Y2K style), ரெட்ரோ ஸ்டைல் (Retro style), போஹோ ஸ்டைல் (Boho style) போன்றவை அதிக அளவில் தேடப்பட்டவை.