Skip to main content

கிட்னி கற்களை விரட்டும் பீட்ரூட்டின் பயன்கள்!

Published on 09/03/2020 | Edited on 09/03/2020


உணவுப் பொருட்களில் சற்று வித்தியாசமான தன்மை உடையது பீட்ரூட். இதில் எராளமான நன்மைகள் மறைந்துள்ளன. கிட்னி, பித்தப் பைகளில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்புக்களை நீக்கும் சுத்திகரிப்பானாக பீட்ரூட் செயல்படுகின்றது. பீட்ரூட்டில் கார்போ ஹைட்ரேட் சக்கரைத் துகள்களாக இருப்பதால் விரைவில் ஜீரணமாகின்றது. கிட்னியில் கற்கள் உருவாவதை பீட்ரூட் பெருமளவு குறைக்கின்றது. பீட்ரூட் கீரையும் மற்ற கீரைகள் போல் சமைத்து சாப்பிட்டால் மஞ்சள் காமாலை, அல்சர் முதலிய நோய்கள் குணமாகும். தோல் அரிப்பு, எரிச்சல் உள்ள இடங்களில் பீட்ரூட் ஜூஸ் உடன் தண்ணீரை கலந்து தடவினால் அரிப்பு உடனடியாக குறையும்.



100 கிராம் பீட்ரூட்டில் 87.7 விழுக்காடு தண்ணீரும், 1.7 விழுக்காடு புரோட்டினும், கொழுப்பு 0.1 விழுக்காடும் உள்ளன. கார்போஹைட்ரேட் 8.8 விழுக்காடு உள்ளது. மேலும் கால்சியமும், பாஸ்பரஸூம், வைட்டமின் சி-யும் உடலுக்கு தேவையான அளவு நிறைந்துள்ளது. மற்றும் பி1,பி2,பி6 நியாசின், வைட்டமின் பி முதலியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், சல்பர், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் பீட்ரூட்டில் சரியான  விகிதத்தில் நிறைந்துள்ளன.