சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு அமலில் இருந்தும் பொதுமக்கள் சாலைகளில் நடமாடி வருகிறார்கள். இந்நிலையில் இந்த ஊரடங்கு பற்றியும், நோயின் தாக்கம் குறித்தும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் துப்புரவு தொழிலாளர்கள் இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து தங்கள் பணியினை செய்து வருகிறார்கள். அவர்களிடம் பேசிய போது, மாநகராட்சி சார்பாக தங்களுக்கு மாஸ்க் உள்ளிட்ட பொருட்கள் கொடுத்திருப்பதாகவும், போஸிஸ் தரப்பில் எந்த தடையும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த ஊரடங்கு காலத்தில் பணி செய்வது எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு, "முன்னெல்லாம் ஒரே கலீஜ்ஜா இருக்கும். இப்ப அப்படி இல்லை" என்று பதிலளித்துள்ளார்கள்.