உலர் திராட்சையில் ஏராளமான நன்மைகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு திராட்சை மிக நல்ல ஊட்டச்சத்தான உணவு பொருளாகும். உலர் திராட்சையை பாலுடன் கொதிக்க வைத்து தினமும் ஒரு கிளாஸ் அருந்தினால் பிறக்கும் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். கால்சியத்தின் அளவு உலர் திராட்சைகளில் மிக அதிகமாக இருக்கின்றது. உலர் திராட்சை பழத்தை நீருடன் கொதிக்க வைத்து அருந்தினால் வயிற்று வலி பிர்ச்சனை சரியாகி விடும். எலும்புகள் வலுபெறுவதற்கு உலர் திராட்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உடல் வலியால் அவதியுறுபவர்கள் சிறிதளவு பெருங்காயத்துடன் உலர் திராட்சை சேர்த்து கசாயம் போன்று செய்து குடித்து வந்தால் உடல் வலி பறந்து போகும். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலியினை குணப்படுத்த சிறந்த மருத்துவ பொருளாக உலர் திராட்சைகள் இருக்கின்றது. இதயத்துடிப்பு வேகமாக இருப்பவர்கள் உலர் திராட்சையை தொடர்ந்து எடுக்கும் போது இதயத்துடிப்பு சீராவதுடன் பதட்டம் குறைகின்றது. உடல் எடை கணிசமாக அதிகரிப்பதற்கு உலர் திராட்சைகள் பெரிதும் பயன்படுகின்றது.