சிடுசிடுவென கோபப்படுகிறவர்களை ப்ளட் பிரசர் ஓவராகிடுச்சு என்று சொல்வதுண்டு. உண்மையில் கோபத்திற்கும் இரத்த அழுத்தத்திற்கும் என்ன தொடர்பு என்பது குறித்து பிரபல மருத்துவர் சங்கர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்
ரத்த அழுத்தத்துக்கும், கோபத்துக்கும் நேரடித் தொடர்பு எதுவும் இல்லை. கோபப்பட்டால் கார்டிசால் போன்ற ஹார்மோன்கள் உடலில் ஏறும். அதன் மூலம் ரத்த அழுத்தம் ஏற்படும். மனதினால் உடலில் ஏற்படும் நோய்கள், உடலினால் மனதில் ஏற்படும் நோய்கள் என்று இரண்டு வகைகள் உள்ளன. உதாரணத்துக்கு, முட்டி வலி ஏற்பட்டால் அது குறித்த சிந்தனையில் மனமும் ஈடுபட்டு மன அழுத்தம் ஏற்படுகிறது. மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் சரியானால் உடலில் பல்வேறு சிக்கல்கள் சரியாகும். திரும்பத் திரும்ப ஒரு விஷயத்தை சிந்தித்துக்கொண்டே இருந்தால் அது ஒரு நோயாக மாறும்.
குடிபோதை என்பது கூட பல நேரங்களில் நோயாக மாறுகிறது. அழுத்தங்களைக் கொடுப்பதில் எது பிரதானமாக இருக்கிறது என்பதை அறிந்து அதற்கு முதலில் சிகிச்சை அளிப்போம். சில நேரங்களில் இந்தப் பிரச்சனையை மருந்து இல்லாமலும் குணப்படுத்த முடியும். நம்முடைய உடலிலேயே மிகப்பெரிய உறுப்பு என்பது நம்முடைய தோல் தான். அதில் வியர்வை மூலம் அசுத்தங்கள் வெளியேறுகின்றன. மலக்குடலில் உள்ள பாக்டீரியாக்கள் தான் பல பிரச்சனைகளுக்குக் காரணம். உடலில் அலர்ஜி ஏற்படுவதற்கு பெரும்பாலும் பாக்டீரியாக்கள் தான் காரணம்.
மலக்குடலில் சிறு துவாரங்கள் ஏற்பட்டு, அந்த நச்சுக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. ரத்த பரிசோதனை செய்யும்போது அதனை நம்மால் அறிந்துகொள்ள முடியும். இதற்கென்று சிறப்பு பயிற்சி எடுக்க வேண்டும். ஒருவருடைய வயதைக் குறைக்கும் சிகிச்சை என்பது அவருடைய தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாது. ஆனால் அவருடைய தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்தும். வயதானவர்களுக்கும் உடல் உறுப்புகளை வேகமாக செயல்பட வைக்க முடியும். அவர்களுடைய நடவடிக்கைகளில் அதை நம்மால் உணர முடியும்.
நம்முடைய தவறான வாழ்க்கை முறைகள், உணவு முறைகள், தூக்கமின்மை ஆகியவை தான் விரைவிலேயே வயதானவர்கள் போல் நம்மை ஆக்குகிறது. சில இளைஞர்களுக்கு முடி நரைத்திருக்கும். உடலுக்குத் தேவையான மினரல்கள் இல்லாததுதான் அதற்கான காரணம். அதற்கான மருந்துகள் கொடுத்து அதை நாம் சரிப்படுத்தலாம். சிலருக்கு வயதான பிறகும் கூட முடி நரைக்காது. தோலுக்கு அடியில் இருக்கும் நீர்ச்சத்து நன்றாக இருந்தால் பிரச்சனைகள் வராது.