மனச்சோர்வு குறித்த பல்வேறு தகவல்களை டாக்டர் கல்பனா நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் டென்ஷன் என்கிற வார்த்தையை அதிகம் பயன்படுத்துகிறார்கள். நிறைய கோபம் வருகிறது என்கிறார்கள். டென்ஷனாவதால் மனச்சோர்வு உண்டாகிறது. பெரியவர்கள் தங்களுடைய குழந்தைகளுக்காகவே வாழ்க்கையை வாழும் வகையில் தான் நம்முடைய சமூக அமைப்பு இருக்கிறது. அதனால் அவர்கள் தங்களுடைய ஆசைகள் அனைத்தையும் ஒதுக்கி வைக்கின்றனர். குறிப்பாக தந்தைக்கு இதனால் அதிக மனச்சோர்வு ஏற்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் சிகரெட் குடிக்க ஆரம்பிக்கிறார்கள். புகை என்பது மிகவும் ஆபத்தானது.
இதனால் பிற்காலத்தில் அவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் உங்களுக்காகவும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும் என்று நான் பொதுவாக அனைவருக்கும் அறிவுரை வழங்குவேன். தங்களுக்கான நேரம் என்பது அனைவருக்குமே வேண்டும். அப்போதுதான் மனது லேசாகும். இரண்டு நிமிடம் கண்களை மூடி அமர்ந்திருந்தாலே போதுமானது. குழந்தைகள் பெரும்பாலும் வெளிநாடு சென்றுவிடுவதால் பெற்றோர் இங்கு தனியாக இருக்கின்றனர். குழந்தைகளிடம் வீடியோ கால் மூலமாகத் தான் பேசுகிறார்கள். அந்த நேரங்களில் அவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படுகிறது.
அப்படியான நேரத்தில் அவர்களுக்கு உடல் பாதிப்பு ஏதேனும் இருக்கிறதா என்பதையும் பரிசோதனை செய்ய வேண்டும். தூக்கமின்மை பிரச்சனையும் அவர்களுக்கு இருக்கும். அவர்கள் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். தேவையான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மனச்சோர்வு காரணமாக நிறைய தற்கொலைகளும் நடக்கின்றன. வயதான பிறகு தான் உங்களுடைய வாழ்க்கை தொடங்குகிறது. இப்போதுதான் உங்களுக்கு ஒரு வயது ஆகிறது என்று நினைத்துக்கொள்ளுங்கள். மகிழ்ச்சியாக வாழுங்கள். இப்போது நமக்கு அனைத்து விதமான மருத்துவ வசதிகளும் இருக்கின்றன. என்ன பிரச்சனை என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்