
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை திமுக கிழக்கு ஒன்றிய செயலாளராக இருந்து வருபவர் நகர மன்ற துணைத் தலைவர் வைத்தியநாதன். அதேபோன்று மேற்கு ஒன்றிய திமுக செயலாளரான ராஜவேல் உளுந்தூர்பேட்டை ஒன்றிய குழு தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக வைத்தியநாதன், ராஜவேல் இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள ஒன்றிய குழு தலைவர் அறையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இரு தரப்பினருக்கு திடீரென வாக்குவாதம் முற்றியது. அந்த சமயத்தில் திமுக ஒன்றிய குழு தலைவர் ராஜவேலுக்கு ஆதரவாக பாமக நிர்வாகி செந்தில் தலையிட்டதால் திடீரென அது மோதலாக மாறியது/ இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாமக நிர்வாகி செந்திலுக்கு ஆதரவாக் சமாதானம் பேசி கூட்டத்தைக் கலைக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் திமுக நகர்மன்ற துணைத் தலைவர் வைத்தியநாதன் பாமக நிர்வாகிக்கு கமிஷன் தொகை கொடுக்காததால் தான் திமுக நிர்வாகிகளிடையே மோதலை உருவாக்கியுள்ளதாக அக்கட்சியினரே குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.