
நாகர்கோவில் வடச்சேரி காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக லட்சுமணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் குற்றம் சட்டம் நடப்பதை கண்காணிப்பதற்காக நேற்று முன்தினம் நீதிமன்ற சாலையில் காவலர் சீருடையில் இல்லாமல் மப்டியில் ரோந்த் பணி மேற்கொண்டு இருந்தார். அப்போது லட்சுமணன் தனியாக நின்றதை பார்த்துக்கொண்டிருந்த இரு பெண்களும், ஒரு இளைஞரும் அவரிடம் வந்து பேச்சுக் கொடுத்துள்ளனர். அப்போது எங்களிடம் இளம்பெண் ஒருவர் இருக்கிறார். அவருடன் தனிமையில் இருப்பதற்கு ரூ.1,500 கொடுத்தால் போது என்று கூறியிருக்கின்றனர்.
இதனை உணர்ந்த காவல் உதவி ஆய்வாளர் லட்சுமணன் தான் யார் என்பதை வெளியே காட்டாதவாறு அவர்கள் கூறியதற்கெல்லாம் சரி என்று தலையை அசைத்திருக்கிறார். அதன்பிறகு மூன்றுபேரும் உதவி ஆய்வாளர் லட்சுமணனை ஒரு வாடகை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஒரு அறையில் இளம் பெண் ஒருவர் அரைகுறை ஆடைகளுடன் வந்துள்ளார். இதனிடையே உதவி ஆய்வாளர் லட்சுமணன் வடசேரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனிடையே லட்சுமணன் யார் என்பதைத் தெரிந்துகொண்ட மூவரும் அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயன்றுள்ளனர். ஆனால், உடனடியாக காவல்நிலையத்தில் இருந்து போலீசார் மூவரையும் மடக்கிப் பிடித்தனர். அதேசமயம் அறையில் அரைகுறை ஆடைகளுடன் இருந்த இளம்பெண்ணை மீட்ட போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த இளம்பெண் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் பணத்தாசை காட்டி மூவரும் அந்த இளம் பெண்ணை பாலியல் தொழிலில் தள்ளியதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மூன்று பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் கொடைக்கானலை சேர்ந்த ராமச்சந்திரன், அவரது மனைவி ராகவி மற்றும் நாகர்கோவிலைச் சேர்ந்த விஜயகுமாரி என்பது தெரியவந்தது. இதில் விஜயகுமாரி பாலியல் தொழிலுக்கு புரோக்கராக பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.