Skip to main content

வகுப்பறையிலேயே பள்ளி மாணவி உயிரிழப்பு- தென்காசியில் அதிர்ச்சி

Published on 05/04/2025 | Edited on 05/04/2025
A student who was laughing and talking in the classroom fainted and lose their live - shock in Tenkasi

தென்காசி மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து வகுப்பறையிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தென்காசி மாவட்டம் சுரண்டையில் அடுத்துள்ள இரட்டைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரகாஷ்-மீனா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ள நிலையில் மகள் மானசா அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இன்று காலை வழக்கம்போல வீட்டில் இருந்து சைக்கிளில் பள்ளிக்கு சென்ற மானசா வகுப்பறையில் சக தோழிகளுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த பொழுது, திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக சக மாணவர்கள் ஆசிரியர்களிடம் தெரிவித்த நிலையில், மானசாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உடனடியாக இதுகுறித்து சுரண்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தற்பொழுது மாணவி உடலானது தென்காசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுபவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்