இன்றைய பஞ்சாங்கம்
13-07-2023, ஆனி 28, வியாழக்கிழமை, ஏகாதசி திதி மாலை 06.25 வரை பின்பு தேய்பிறை துவாதசி. கிருத்திகை நட்சத்திரம் இரவு 08.52 வரை பின்பு ரோகிணி. நாள் முழுவதும் மரணயோகம். கிருத்திகை - ஏகாதசி விரதம். பெருமாள்- முருக வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
இன்றைய ராசிபலன் - 13.07.2023
மேஷம்
இன்று உங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் உதவியுடன் செய்து முடிப்பீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் எல்லாம் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.
மிதுனம்
இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.
கடகம்
இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் வழியில் சுப செய்தி வரும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பழைய கடன்கள் வசூலாகும்.
சிம்மம்
இன்று வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். செய்யும் வேலைகளை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மனைவி வழியாக நல்லது நடக்கும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.
கன்னி
இன்று நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். அடுத்தவர்களை நம்பி எந்த வாக்குறுதியும் கொடுக்காமல் இருப்பது நல்லது. சிக்கனமாக செயல்பட்டால் பணப் பிரச்சினை ஒரளவு குறையும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் ஒத்துழைப்பு தருவார்கள். வருமானம் பெருகும்.
துலாம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரை நம்பி கொடுத்த பொறுப்புகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலிலும் நிதானம் தேவை. பயணங்களை தவிர்க்கவும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்கள் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்.
தனுசு
இன்று உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் அனுகூலமான பலன்கள் கிட்டும். புதிய பொருள் வாங்குவதற்கான யோகம் உண்டு. சுபகாரியங்கள் கைகூடும்.
மகரம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க சற்று காலதாமதமாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். பணியாட்களின் ஒத்துழைப்போடு தொழிலில் முன்னேற்றத்தை காணலாம்.
கும்பம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எதிர்பாராத மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று தாமதநிலை ஏற்படும். தொழில் ரீதியான பயணங்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
மீனம்
இன்று காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். உங்கள் பிரச்சினைகள் தீர உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி கிட்டும். திடீர் பணவரவு உண்டாகும்.