உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தின் மீது நடத்தப்பட்டத் தாக்குதலைப் போன்றதாகும் என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் காணொளி வாயிலாக பேசிய உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல் கடந்த 80 ஆண்டுகளில் ஐரோப்பா கண்டிறாதது. 1941- ஆம் ஆண்டு பேல் ஆர்பர் மற்றும் 2011- ஆம் ஆண்டு நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதலைப் போன்று ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், ரஷ்யாவின் தாக்குதலால் உருக்குலைந்த உக்ரைன் நகர கட்டடங்கள், காயமுற்ற குழந்தைகள் என பல காட்சிப் பதிவுகளையும் அவர் வெளியிட்டார்.
முன்னதாக, அதிபர் ஜெலன்ஸ்கி பேசுவதற்கு முன்பு, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டினர்.