சாம்சங், ஹவாய் மற்றும் ஓப்போ நிறுவனங்களைத் தொடர்ந்து சியோமி நிறுவனமும், தனது நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்ஃபோன் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேசமயம் சியோமி நிறுவனம்தான் முதல் நிறுவனமாக தனது 5ஜி ஸ்மார்ட்ஃபோனின் விலையை தெரிவித்துள்ளது.
பார்சிலோனாவில் நடைபெற்ற உலக மொபைல் மாநாட்டில் சியோமி எம்.ஐ. மிக்ஸ் 3 (Mi Mix 3) என்ற தனது நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்துள்ளது.
சியோமி எம்.ஐ. மிக்ஸ் 3, 5ஜி ஸ்மார்ட்ஃபோனில் Snapdragon 855 பிராசசர், ஹைப்ர்டிக் கூலிங் சிஸ்டம், 6.39 இன்ச் டிஸ்ப்ளே, மேக்னடிக் ஸ்லைடர், 24 மற்றும் 2 மெகா பிக்சல் என இரண்டு செல்ஃபி கேமரா, பின் பக்கம் இரண்டு 12 மெகா பிக்சல் கேமரா என வெளியாகியுள்ளது. இந்த 5ஜி ஸ்மார்ட்ஃபோன் இந்திய மதிப்பில் ரூ. 48,000 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொலைத் தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலர் எஸ்.கே. குப்தா, இந்தியாவில் 2022-ம் ஆண்டு முதல் 5ஜி சேவை தொலைத் தொடர்புத்துறையில் பின்பற்றப்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.