பிரான்ஸ் நாட்டின் உணவு வகைகளும், அந்த நாட்டவர்களின் வாழ்க்கை முறையும் உலகளவில் பிரசித்தி பெற்றதாக திகழ்ந்து வருகிறது. இந்த சூழலில் சயின்ஸ் போ லில் என்ற பிரான்ஸ் நாட்டு அரசியல் அறிவியல் பல்கலைக்கழகம் எப்படி சாப்பிடுவது, எப்படி அருந்துவது, வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பது குறித்து முதுகலை பட்டப்படிப்பை வழங்கி வருகிறது.
இந்த பட்டப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு உணவுகள், பானங்கள், உணவு தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்து பாடங்கள் எடுக்கப்படுகின்றன. மேலும் விவசாயம், வாழ்க்கை முறை குறித்து கட்டுரைகள் எழுதுவதும், உணவு மற்றும் பானங்கள் குறித்து மாநாடுகளில் பங்கேற்பதும் இந்த பட்டப்படிப்பில் ஒரு அங்கமாக உள்ளது.
"வாழ்வதற்காக உட்கொள்வது என்பது இயற்கையின் ஒரு அங்கம். உணவு என்பது தனிநபருக்கும் இந்த கிரகத்திற்கும் ஒரு தடுப்பு மருந்தாக இருக்க வேண்டும்" என இந்த முதுகலை பட்டப்படிப்பை அறிமுகப்படுத்திய விரிவுரையாளர் பெனாய்ட் லெங்கெய்ன் கூறியுள்ளார்.